www.garudabazaar.com

மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜி... விஜய் டிவி கொடுத்த மரியாதை... கலங்க வைக்கும் புரோமோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி புகழ் பாலாஜி கடந்த செப்டம்பர் 10-ம் தேதி சென்னையில் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரது காமெடிகள் ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்துள்ளன. அவரது இறப்பு உண்மையில் பலருக்கும் பெரிய இழப்பாகவே இருக்கிறது. கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருந்தார் பாலாஜி.

Vijay tv pays respect to vadivel balaji வடிவேல் பாலாஜிக்கு விஜய் டிவி மரியாதை

அவரது மரணம் மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் உலுக்கி விட்டது என்றே சொல்லவேண்டும். பலரும் அவருக்கு நேரடியாகவும் இணையதளம் மூலமாகவும் அஞ்சலி செலுத்தி வந்தனர். ஆனாலும் அவர் பிரபல விஜய் டிவியின் காமெடி ஜாம்பவான் என்பதால் விஜய் டிவி அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக இருந்தது, இதனையடுத்து தற்போது புதிய வீடியோ ஒன்று விஜய் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிரபல காமெடியன் வடிவேலு பாலாஜிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவருடன் பணியாற்றியவர்கள் மற்றும் விஜய் டிவியின் பிரபலங்களும் இணைந்து அவருக்கு அஞ்சலி நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர். பார்ப்பதற்கே மனதை உடைக்கும் வகையில் இருக்கும் அந்த வீடியோ இதோ..!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay tv pays respect to vadivel balaji வடிவேல் பாலாஜிக்கு விஜய் டிவி மரியாதை

People looking for online information on Vadivelu Balaji, Vijay tv will find this news story useful.