www.garudabazaar.com

"வட சென்னை படமே இன்னும் பாக்கல.. அதுக்கு காரணம் இதுதான்".. மனம் திறந்த விஜய் சேதுபதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi talks about Vada Chennai Part 2 and Vetrimaran

1996ஆம் ஆண்டு முதல் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்து வந்தவர் விஜய் சேதுபதி, லவ் பேர்ட்ஸ், கோகுலத்தில் சீதை, புதுப்பேட்டை, எம். குமரன் S/o மகாலெட்சுமி, லீ, வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, பலே பாண்டியா ஆகிய படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்டாக கவனிக்க தக்க வகையில் நடித்திருப்பார்.

Vijay Sethupathi talks about Vada Chennai Part 2 and Vetrimaran

பின் தென்மேற்கு பருவக்காற்று, பீட்ஸா, சூது கவ்வும், சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ஆகிய படங்களின் மூலம் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறினார். அவ்வப்போது கேமியோ, வில்லன் ரோல்களிலும் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் விக்ரம் , காத்துவாக்குல ரெண்டு காதல், மாமனிதன், DSP ஆகிய படங்கள் வெளியானது. 

விஜய் சேதுபதி நடித்து இடம் பொருள் ஏவல், யாதும் ஊரே யாவரும் கேளீர்,  விடுதலை, மும்பைக்கர், பிசாசு2, ஜவான் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

சமீபத்தில் ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் புகழ் பெற்ற இயக்குனர்களான ராஜ் & டிகே இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த Farzi வெப் சீரிஸ், அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi talks about Vada Chennai Part 2 and Vetrimaran

இந்நிலையில் விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, "வட சென்னை படத்தில் நடிக்க மிஸ் பண்ணிட்டேன். நான் அந்த படத்தை தவற விட்டதற்காக வருந்தி இருக்கேன். அதனால் வட சென்னை படத்தை பார்க்கவில்லை. பார்த்தால் ரொம்ப வருத்தப்படுவேன்னு பார்க்கல. பாடல் காட்சிகள் மட்டும் பார்த்து இருக்கேன். இதை வெற்றிமாறன் சார்ட்டயே சொல்லிருக்கேன்" என விஜய் சேதுபதி பேசினார்.

"வட சென்னை படமே இன்னும் பாக்கல.. அதுக்கு காரணம் இதுதான்".. மனம் திறந்த விஜய் சேதுபதி! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi talks about Vada Chennai Part 2 and Vetrimaran

People looking for online information on Vada chennai, Vada Chennai - 2, Vetrimaaran, Viduthalai, Vijay Sethupathi will find this news story useful.