www.garudabazaar.com
iTechUS

"வாத்தி"யாக இளையராஜா.. மாணவர் போல மாறிய தனுஷ்.. விஜய் சேதுபதி படத்துக்காக இணைந்த காம்போ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அசுரன் மற்றும் பாவ கதைகள் அந்தாலஜியில் 'ஓர் இரவு' உள்ளிட்ட படைப்புகள் இயக்கியதை தொடர்ந்து தற்போது 'விடுதலை' என்னும் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.

Dhanush sing first time in ilaiyaraaja music viduthalai movie vetrimaaran

Images are subject to © copyright to their respective owners.

Also Read | VIDEO: "வாத்தி.. தனுஷ் Fans & பொதுவான ரசிகர்களுக்கு எப்படி இருக்கும்?" சம்யுக்தா மேனன் EXCLUSIVE பதில்!

எல்ட்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. விடுதலை படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாகவும் உருவாகி வருகிறது.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக கொண்டு தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார். அதே போல, ஜெயமோகன் இந்த படத்தில் எழுத்தாளராகவும் பணிபுரிகிறார்.

Dhanush sing first time in ilaiyaraaja music viduthalai movie vetrimaaran

Images are subject to © copyright to their respective owners.

பல இடங்களில் விடுதலை படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இவை அனைத்தும் முடிவடைந்துள்ளதாகவும் தெரிகிறது. அதே போல, படத்தின் போஸ்டர்களும் வெளியாகி இருந்த நிலையில், அதில் சூரி ஒரு காவலர் போன்றும், விஜய் சேதுபதி ஒரு கைதி போன்றும் வருகிறார்கள். வெற்றிமாறன் படம் என்றால் இருக்கும் அதே எதிர்பார்ப்பு, விடுதலை படத்தின் மீதும் அதிகம் உருவாகி உள்ளது.

Dhanush sing first time in ilaiyaraaja music viduthalai movie vetrimaaran

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே, விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்திருந்தது. அதே போல, சமீபத்தில் விடுதலை படத்தின் டப்பிங்கும் ஆரம்பமாகி இருந்தது.

Dhanush sing first time in ilaiyaraaja music viduthalai movie vetrimaaran

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், விடுதலை படத்தின் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோவில், இசை அமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் உள்ளனர். "உன்னோட நடந்தா" என்ற பாடலை தானுஷ் பாடி உள்ளார். அவர் இளையராஜா இசையில் பாடி உள்ள முதல் பாடல் இதுவாகும். விடுதலை படத்தின் முதல் சிங்கிள் பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், சில ஜாலியான காட்சிகளும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

Also Read | "உங்களுக்காக தான் ஷாருக்".. ரசிகர் வரைந்த 'பதான்' ஓவியம்.. நடிகர் ஷாருக் கானின் வைரல் ட்வீட்.!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush sing first time in ilaiyaraaja music viduthalai movie vetrimaaran

People looking for online information on Dhanush, Ilaiyaraja, Vetrimaaran, Viduthalai will find this news story useful.