www.garudabazaar.com

"ஒரே படத்துல ஹிட் ஆனேன், இனி விஜய் சேதுபதி மனசு வெச்சா தான்".. TSR ஸ்ரீனிவாசன் ஷேரிங்ஸ்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் சமீபத்தில் வெளியாகி இருந்த வெப் சீரியஸ் தொடர் 'அயலி'. முத்து குமார் இயக்கி இருந்த இந்த தொடர் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு காரணம், பெண்களின் கல்விக்கான முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்த வெப் சீரியஸ் தொடர் அமைந்திருந்தது தான். தமிழில் வெளியான சிறந்த தொடர் என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

TSR Srinivasan about movies with vijay sethupathi exclusive

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Bakasuran : செல்வராகவன் நடிப்பில் பகாசூரன்.. பட போஸ்டரை ஒட்டிய இயக்குநர் மோகன்.ஜி .. வீடியோ

அயலி தொடரில், அபி நக்ஷத்ரா, அனுமோள், மதன், லிங்கா, சிங்கம் புலி, TSR ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். Estrella Stories தயாரிப்பு நிறுவனம் சார்பாக, குஷ்மவதி இந்த தொடரை தயாரித்துள்ளார். மேலும் இந்த தொடரின் திரைக்கதை மற்றும் வசனத்தை வீணை மைந்தன், சச்சின் மற்றும் முத்து குமார் ஆகியோர் எழுதி உள்ளனர். ரேவா இசையமைத்த இந்த தொடர், Zee 5 தளத்தில் வெளியாகி இருந்தது.

அயலி தொடரில் வரும் வசனங்களும், தொடரை சுற்றி வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அதிகம் பாராட்டுக்களை பெற்றிருந்தது. அதே போல, பள்ளி ஆசிரியராக நெகடிவ் கலந்த ஒரு காமெடி கதாபாத்திரத்தில் வந்து பலரது அப்ளாஸையும் அள்ளி இருந்தார் நடிகர் TSR ஸ்ரீனிவாசன்.

இந்த நிலையில், Behindwoods நேயர்களுக்காக பிரத்தியேக பேட்டி ஒன்றை நடிகர் TSR ஸ்ரீனிவாசன் அளித்துள்ளார். அப்போது தன்னுடைய சினிமா பயணம் குறித்து ஏராளமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட ஸ்ரீனிவாசன், அயலி உள்ளிட்ட பல படைப்புகளில் நடித்த அனுபவம் பற்றியும் பேசி இருந்தார்.

TSR Srinivasan about movies with vijay sethupathi exclusive

Images are subject to © copyright to their respective owners.

இதனைத் தொடர்ந்து, தான் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாக வேண்டுமென்றும், தான் வெளியே வந்தாலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாலில் போனால் கூட அனைவரும் செல்ஃபி எடுக்கும் வகையில் ஸ்தம்பித்து தன்னுடன் புகைப்படம் எடுக்க வர வேண்டும் என்றும் விருப்பத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அதே போல, சில நடிகர்கள் தனது கன்னத்தை கிள்ளுவது பற்றியும் பேசி இருந்த நடிகர் TSR ஸ்ரீனிவாசன், "எல்லாருமே என் கன்னத்தை கிள்ளுறாங்க. ஜாலியா ஃபன் பண்றாங்க. சிவகார்த்திகேயன் அதுல ஸ்பெஷலிஸ்ட். ஜாலியா கன்னத்தை கிள்ளுவாரு. அதே மாதிரி விஜய் சேதுபதியும் அப்படி தான். அவருகூட ஒரே படத்துல பட்டிதொட்டி எல்லாம் பரவுனேன். அதுக்கப்புறம் அவரு 14 படம் பண்ணிட்டாரு. ஆனா அவரா பார்த்து மனசு வைக்கணும்ல. டைரக்டரை கூப்பிட்டு அவரு சொன்னா தான் கேப்பாங்க.

சினிமா வாழ்க்கையில கிடைச்ச ஒரு மிகப் பெரிய பிரசாதம், எல்லா ஹீரோ, ஹீரோயின்ஸ் கூட காம்பினேஷன் கிடைச்சது தான். ஒரு பத்து நாள் விஜய் சாரோட, ஒரு பத்து நாள் அஜித் சாரோடன்னு என் பெர்ஃபார்மன்ஸ் தெரியும். அது நெகடிவ்வா கூட இருக்கலாம்" என தெரிவித்தார்.

Also Read | அனைவரையும் சிரிக்கவெச்ச பிரபல நடிகை மரணம்.. அதிர்ச்சியில் மலையாள திரையுலகம்!!

"ஒரே படத்துல ஹிட் ஆனேன், இனி விஜய் சேதுபதி மனசு வெச்சா தான்".. TSR ஸ்ரீனிவாசன் ஷேரிங்ஸ்!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

TSR Srinivasan about movies with vijay sethupathi exclusive

People looking for online information on TSR Srinivasan, Vijay Sethupathi will find this news story useful.