www.garudabazaar.com

"முதல்நாள் முதல் ஷோ-க்கு கூட்டமே இல்ல".. அயோத்தி படம் குறித்து மனம் திறந்த சசிகுமார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் & நடிகர் சசிகுமார், நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Sasikumar about Ayodhi Movie First Day First Show

Also Read | பிரபல விமான நிலையத்தில் இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா & விக்னேஷ் சிவன்.. வைரலாகும் வீடியோ!

2008 ஆம் ஆண்டு வெளிவந்த சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானார் சசிகுமார்.‌ இந்த சுப்ரமணியபுரம் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவில் முக்கிய படமாக அமைந்தது.

சசிகுமார், இயக்குனர் பாலாவிடம் சேது படத்திலும், அமீருடன் மௌனம் பேசியதே, ராம் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஆவார்.

தற்போது சசிகுமார் நடிப்பில் நந்தன் ஆகிய படம் உருவாகி வருகின்றது.  கடந்தாண்டு பொங்கலுக்கு சசிகுமார் நடிப்பில் "கொம்பு வச்ச சிங்கம்டா", பின்னர் நான் மிருகமாய் மாற, காரி ஆகிய படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Sasikumar about Ayodhi Movie First Day First Show

Images are subject to © copyright to their respective owners.

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியாகி உள்ள 'அயோத்தி' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். என் ஆர் ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார், மாதேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை நடிகர் சசிகுமார் அளித்துள்ளார். அதில், அயோத்தி படம் குறித்து பேசிய சசிகுமார், "அயோத்தி படம் முதல் நாளில் வெள்ளிக்கிழமை தியேட்டரில் யாருமே இல்லை. உண்மையை சொனனா இதான்.

Sasikumar about Ayodhi Movie First Day First Show

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் மீது நம்பிக்கை இருந்தது.  படத்திற்கு ப்ரோமோஷன் இல்லை.  நம்ம மார்க்கெட் நமக்கு தெரியும்ல. திடீரென வந்த போது, மக்கள் எதிர்பார்க்காமல் இந்த படத்தை பார்த்த பிறகு மக்கள் அவர்கள் கையில் எடுத்துட்டு போயிட்டாங்க. மக்களே சிலர் டிக்கெட் எடுத்து கொடுத்து இந்த படத்தினை பார்க்க சொல்கிறார்கள்." என சசிகுமார் பேசினார்.

Also Read | பழங்குடியின போராளியை பிடிக்க போகும் போலீஸ்.. வெற்றிமாறனின் விடுதலை டிரெய்லர்!

"முதல்நாள் முதல் ஷோ-க்கு கூட்டமே இல்ல".. அயோத்தி படம் குறித்து மனம் திறந்த சசிகுமார்! வீடியோ

Sasikumar about Ayodhi Movie First Day First Show

People looking for online information on Ayodhi Movie, Ayodhi Movie First Day First Show, Sasi Kumar will find this news story useful.