www.garudabazaar.com
iTechUS

வெற்றிமாறன் உருவாக்கத்தில் வெப்சீரிஸாகும் அற்புதம் அம்மாள் பயோபிக்? இயக்குநர் இவரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஜீவ்காந்தி வழக்கில் சம்பந்தப்பட்டு சிறை சென்று விடுதலையானவர் பேரறிவாளன். இவரது தாய் அற்புதம் அம்மாள் இவரது விடுதலைக்காக அலைந்து திரிந்து போராடிய வரலாற்றை பயோபிக் வெப் சீரீஸாக இயக்குநர் வெற்றிமாறன் உருவாக்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இத்தொடரை வெற்றிமாறனின் உதவியாளர் இயக்கவுள்ளதாகவும் தெரிகிறது.

Arputham Ammal biopic as web series from vetrimaaran team

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "உங்களுக்காக தான் ஷாருக்".. ரசிகர் வரைந்த 'பதான்' ஓவியம்.. நடிகர் ஷாருக் கானின் வைரல் ட்வீட்.!

ராஜீவ் காந்தி வழக்கு தொடர்பாக சுமார் 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து சமீபத்தில் விடுதலை ஆன பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், முன்னதாக 2022-ல் நடைபெற்ற Behindwoods கோல்டு மெடல்ஸ் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  அவருக்கு, "Behindwoods - Golden icon of inspiration" விருது இயக்குநர் வெற்றிமாறன் கைகளாக் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விருதை பெற்றுக்கொண்ட பின்னர் பேசிய அற்புதம் அம்மாள், அனைவரின் ஒத்துழைப்பு இருந்ததால் தான் என்னால் வெற்றி பெற முடிந்தது என்றும், அனைவருடைய கூட்டு அன்பு தான் மகன் விடுதலையாக காரணம் என்றும் மனம் உருகி கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தார். அதே போல, மகனின் ஸ்தானத்திலிருந்து, இயக்குனர் வெற்றிமாறன் அற்புதம் அம்மாளுக்கு புடவை ஒன்றையும் பரிசாக வழங்கினார்.

அதன் பின்னர் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், "அற்புதம் அம்மாள் சோர்வாக இருந்து நான் பார்த்ததே கிடையாது. பேரறிவாளனுக்கு தண்டனையை அறிவித்து, தேதியும் குறிப்பிட்ட சமயத்தில், நான் அற்புதம்மாளை சந்தித்தேன். அப்போது கூட எந்த ஒரு சந்தேகமும், எந்த ஒரு பயமும் அவரிடத்தில் இல்லை. ஒரு வேளை இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், அவ்வளவு தன்னம்பிக்கையாக தனது மகனை நிச்சயம் காப்பாற்றுவேன் என்றபடி இருந்தார். அவர் நிச்சயம் ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்" என குறிப்பிட்டிருந்தார்.

Arputham Ammal biopic as web series from vetrimaaran team

தொடர்ந்து, அற்புதம் அம்மாள் வாழ்க்கையை பயோபிக்காக இயக்குவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த வெற்றிமாறன், "இது தொடர்பாக, கடந்த 2, 3 ஆண்டுகளாக நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். அதற்கான நேரம் இப்போது வந்து விட்டது என்று நான் நினைக்கிறேன். அவர்களின் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தே சொல்ல வேண்டும் என நாங்கள் ஆசைப்படுகிறோம். திரைப்படமா அல்லது வெப் சீரிஸா என்பதை இன்னும் நாங்கள் தீர்மானிக்கவில்லை. ஆனால் நிச்சயமாக இதை உருவாக்குவோம்" என பேசி இருந்தார்.

இந்நிலையில்தான், தன் மகனின் விடுதலைக்காக போராடிய அற்புதம் அம்மாளின் வாழ்க்கை வரலாற்றை பயோபிக் வெப் சீரீஸாக இயக்குநர் வெற்றிமாறன் உருவாக்க, இத்தொடரை இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநர் வர்ஷா இயக்கவுள்ளதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனிடையே சூரி, விஜய் சேதுபதி நடிப்பிலான ‘விடுதலை’ டப்பிங் பணிகள் இருப்பதால், அவை முடிந்து சுமார் 4, 5 மாதங்களில் அற்புதம் அம்மாள் பயோபிக் வெப் சீரிஸ் தொடங்கப்படுடலாம் என்றும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | "வாத்தி"யாக இளையராஜா.. மாணவர் போல மாறிய தனுஷ்.. விஜய் சேதுபதி படத்துக்காக இணைந்த காம்போ

தொடர்புடைய இணைப்புகள்

Arputham Ammal biopic as web series from vetrimaaran team

People looking for online information on Arputham Ammal biopic web series, Vetrimaaran will find this news story useful.