www.garudabazaar.com

“வாரிசு இசைவிழாவில் விஜய் என்னை கவனிக்கலயா?”.. வதந்திகளுக்கு பதிலடி.! ஷோபா Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் விஜய் கலைக்குடும்பத்தில் இருந்து வந்தவர்.

Shoba Chandrashekhar On Varisu Audio Launch and Vijay

Also Read | “Love Marriage பண்ண மாதிரியே தெரிலயே..” - அம்மாவ CUTE-ஆ கலாய்ச்ச விஜய் 😍 EXCLUSIVE

அவரின் தந்தை S.A. சந்திரசேகர் திரைப்பட இயக்குனராகவும், தாயார் ஷோபா பாடகியாவும் முத்திரைப் பதித்தவர்கள். இவர்கள் இருவருமே விஜய்யின் ஆரம்பகால திரைப்படப் பயணத்துக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தவர்கள். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய் நடிப்பில் பல படங்களை இயக்கினார். அவற்றுள் பல படங்களின் தயாரிப்பாளராக ஷோபா பணியாற்றினார். ஷோபா தமிழ் திரையுலகில் பல கிளாசிக் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாயார், ஷோபா சந்திரசேகர், தற்போது Behindwoods சேனலில் பிரத்தியேக பேட்டி அளித்தார். பிரபல நடிகையும், இயக்குநரும், சமூக ஆர்வலருமான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் நேர்காணல் செய்தார்.  இதில் பேசிய ஷோபா சந்திரசேகர், விஜய் நடித்த வாரிசு படத்தில் இடம்பெற்ற அம்மா பாடலை வேற லெவலில் பாடினார். அதன் பிறகு வாரிசு திரைப்பட இசைவிழா குறித்த சர்ச்சை வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.

Shoba Chandrashekhar On Varisu Audio Launch and Vijay

பொங்கலை முன்னிட்டு வெளியான தளபதி விஜய்யின் நடிப்பிலான வாரிசு படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கியிருந்தார்.  நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்துக்கொள்ள, கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றினார்.

முன்னதாக வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 2022 டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.  இதில் விஜய் நடந்து கொண்ட விதம் குறித்த சர்ச்சை வதந்திக்கு விளக்கம் அளித்த ஷோபா சந்திரசேகர், “நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்தே 30 வருடங்கள் ஆகிறது. எனவே எங்களை குறித்த வதந்திகள் குறித்து நாங்கள் பேசிக் கொள்ள மாட்டோம். இது எங்களுக்கு பழகிவிட்டது. சில நேரங்களில் அது நம் மனதை வருத்தப்படச் செய்யும் என்றாலும் கூட அது உண்மையில்லை என்று எங்களுக்கு தெரியும் என்பதால் அது குறித்து நாங்கள் விளக்கமோ தெளிவுரையோ கொடுத்ததில்லை.

Shoba Chandrashekhar On Varisu Audio Launch and Vijay

வாரிசு இசைவிழாவில் நாங்கள் சிறப்பு விருந்தினராகவே வந்திருந்தோம். அங்கே ரசிகர்களை கவனிப்பது தான் முன்னுரிமை. நாங்கள் எங்களை கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் இல்லை. எதிர்பார்க்கவும் கூடாது. நாங்கள்தான் விஜய்யுடன் தினமும் பேசுகிறோமே, அவரை பார்க்கிறோமே.. ஆகவே அந்த இடத்தில் நாங்களும் விஜய்க்கு இவ்ளோ ரசிகர்களா என்று வியந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தோம். நாங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மிகவும் விரும்பி பார்த்த நிகழ்வு அது. இதுபற்றி ஆயிரம் ஆயிரம் பேசுவார்கள், எழுதுவார்கள். ஆனால் நாங்கள் இது குறித்தெல்லாம் பேசிக்கொள்ள மாட்டோம்” என்று தெரிவித்தார்.

Also Read | Last minute-ல மனைவிக்கு சிசேரியன் தாங்கிக்க முடியாத KPY நவீன்.! - அவரது மனைவி உருக்கமான பேட்டி.!

“வாரிசு இசைவிழாவில் விஜய் என்னை கவனிக்கலயா?”.. வதந்திகளுக்கு பதிலடி.! ஷோபா EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Shoba Chandrashekhar On Varisu Audio Launch and Vijay

People looking for online information on Leo, Shoba Chandrashekhar, Thalapathy 67, Varisu, Vijay will find this news story useful.