www.garudabazaar.com
iTechUS

வட சென்னை - 2 எப்போ?.. வாத்தி இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் கொடுத்த தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வாத்தி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசியுள்ளார்.

Dhanush About Vada Chennai Part 2 in Vaathi Audio Launch

Images are subject to © copyright to their respective owners.

நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் தமிழ் - தெலுங்கு திரைப்படம் 'வாத்தி'. பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படத்திற்கு தெலுங்கில் சார் (Sir) என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன்,சாய் குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா ஆகியோர் நடிக்கிறார்கள். 

Dhanush About Vada Chennai Part 2 in Vaathi Audio Launch

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய,  எடிட்டராக நவீன் நூலி , இசையமைப்பாளராக G.V.பிரகாஷ் இந்த படத்தில் பணிபுரிகின்றனர்.

இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.  இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் லலித் குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி) சென்னை சிறுகளத்தூர் சாய் லியோ நகரில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகர் தனுஷ், வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார்.  "வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் நீங்க முதல்ல வெற்றிமாறன் அலுவலகத்தில் கேட்கனும். எப்போனு தெரியலை. கண்டிப்பா வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் வரும் " என தனுஷ் பதில் அளித்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush About Vada Chennai Part 2 in Vaathi Audio Launch

People looking for online information on Dhanush, Vaathi, VadaChennai-2 will find this news story useful.