மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஆறு படங்களாவது ரிலீஸாகி வரும் நிலையில் இந்த ஆண்டு இதுவரை அவர் நடித்த 'பேட்ட' மற்றும் 'சூப்பர் டீலக்ஸ் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படமான 'சிந்துபாத்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் இயக்குனர் அருண்குமார் இயக்கிய 'சிந்துபாத்' என்ற ஆக்சன் திரைப்படம் ஜூன் 21ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன்ஷங்கர் ராஜா இசையில் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள இந்த படத்தை வாசன் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது
மேலும் இதே ஜூன் 21ஆம் தேதி ஜீவா நடித்த 'கொரில்லா' மற்றும் 'கனா' நாயகன் தர்ஷன் நடித்த 'தும்பா' ஆகிய திரைப்படங்களும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருப்பதோடு, புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் மூன்று படங்களும் வெற்றியடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது