இதற்காக படப்பிடிப்புகள் ரத்துசெய்து விடுமுறை அளிக்க நடிகர் சங்கம் வேண்டுகோள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய நடிகர் சங்கம் நாசர் தலைமையிலான அணியின் கீழ்  செயல்பட்டு வருகிறது. அவர்களது பதவிகாலம் முடிவடையும் நிலையில் 2019 - 2023 ஆம் ஆண்டுக்கான நடிகர் சங்க தேர்தல் வரும் ஜூன் 23 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

South Indian Artists Association Request other film Association to announce holiday for shoot

இந்த தேர்தல் வருகிற ஞாயிற்றுக்கிழமை சென்னை ராஜா அண்ணாமலைபுரம், சத்யா ஸ்டூடியோவில் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வாக்களிக்க வசதியாக அன்றைய தினம் படப்பிடிப்புகள் ரத்து செய்யுமாறு நடிகர் சங்கம் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் மற்றும் தமிழ் சின்னத்திரை நடிகர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களுக்கும் நடிகர் சங்கம் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.