நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மகன் சூர்யா இணைந்து நடித்துள்ள ‘சிந்துபாத்’ திரைப்படத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை தொடர்ந்து அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சிந்துபாத்’ திரைப்படத்தை கே புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியும் நடித்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ராக்ஸ்டார் ராபர்’ என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதியும், சூர்யா சேதுபதியும் இணைந்து அசால்ட்டாக ஆட்டய போடும் திருடர்களாக நடித்திருப்பதாக தெரிகிறது. விஜய் சேதுபதியை புதிய அவதாரம் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமத்தை கிளாப் போர்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
A funky number #RockstarRobber 1st Single Video song from #Sindhubaadh.https://t.co/PI5owehsO7
— Yuvanshankar raja (@thisisysr) May 29, 2019
“திருடர் குல திலகம் அண்ணனின் விழுதுகள்”-மகனுடன் விஜய் சேதுபதி அடிக்கும் அட்ராசிட்டி வீடியோ வீடியோ