Reliable Software
www.garudabazaar.com

இலங்கை தமிழராக விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர்... முதல் பாடல் வெளியானது..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர் நடிப்பில் மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளீர் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் யாதும் ஊரே யாவரும் கேளீர் திரைப்படம் குறித்து பிரத்யேக பிரத்தியேக டீசர்  வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல இயக்குநரான மகிழ் திருமேணி நடிக்கவுள்ளாராம்.

vijay sethupathi next film song released யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடல்

மேலும் இவர் படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கிறார் என்றும் நமது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெங்கட கிருஷ்ணா ரோக்நாத் இயக்கும் இப்படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடிக்கிறார். அடுத்தாக அந்தாதூன் திரைப்படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் அடுத்து இயக்கப் போகும் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இலங்கை தமிழராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் படத்தின் டீசர் கூட வெளியானது. இந்நிலையில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் முதல் பாடலான 'முருகா' பாடல் நடிகர் சிலம்பரசன் குரலில், நிவாஸ் கே பிரசன்னா இசையில் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

vijay sethupathi next film song released யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடல்

People looking for online information on Vijay Sethupathi will find this news story useful.