Reliable Software
www.garudabazaar.com

சன் டிவியின் பிரபல சீரியலில் இருந்து விஜய் டிவிக்கு வரும் ஹீரோ... அவரே வெளியிட்ட பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் தற்போது வெற்றிகரமாக இரண்டாம் பாகமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் "நாம் இருவர் நமக்கு இருவர்". இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சீரியலின்  முதல் பாகத்தில் செந்தில், ரக்ஷா, ராஷ்மி போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இந்த சீரியலில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் ராஷ்மி. இந்நிலையில் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு இந்த சீரியலின் இரண்டு நடிகைகளும் திடீரென மாற்றப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Popualr sun tv actor joins vijay tv விஜய் டிவிக்கு வரும் ஹீரோ நடிகர்

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு நடிகை ராஷ்மி விஜய் டிவி சீரியலில் மீண்டும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் அவர் ராஜபார்வை என்ற சீரியலின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இந்த சீரியல் புரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. இதை பார்த்த ராஷ்மி ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். அதேபோல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'சந்திரலேகா' சீரியல் நடித்து வந்த நடிகர் முன்னா அந்த சீரியலில் இருந்து விலகி தற்போது ராஜபார்வை சீரியலில் ஹீரோவாக நடிக்கிறார். இது பற்றி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவும் வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது "மாற்றம் ஒன்ரே மாறாதது! மாற்றமே சிறந்த முண்ணேற்றத்தை தரும்! நல்லதொரு மாற்றத்தை எதி்ர் நோக்கி, புதிய பாதையில் புதிய பார்வையுடன் (ராஜ பார்வையுடன்) என் கலை பயனம் இனி விஜய் டிவியுடன் தொடரும்" என்று கூறியுள்ளார்.

Tags : Vijay tv

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popualr sun tv actor joins vijay tv விஜய் டிவிக்கு வரும் ஹீரோ நடிகர்

People looking for online information on Vijay tv will find this news story useful.