Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

"தலைப்பு கெடைச்சாச்சு".. விஜய் சேதுபதியுடன் இணையும் அடுத்த படம் .. இயக்குநர் முக்கிய தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் சேதுபதியை வைத்து தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சீனு ராமசாமி.

Vijay Sethupathi seenu ramasamy maamanithan மாமனிதன்

இந்த திரைப்படத்துக்கு பின்பு விஜய் சேதுபதியை வைத்து அவர் எடுத்து நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தர்மதுரை. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா, சிருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 

இந்நிலையில் விஜய் சேதுபதியுடன் சீனு ராமசாமி இணையும் அடுத்த திரைப்படத்திற்கு தலைப்பு உறுதியாகிவிட்டதாக சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  இது பற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சீனு ராமசாமி “மாமனிதன் தலைப்பு ஏற்கனவே தயாரிப்பாளர் திரு.ஜெயசீலன் என்பவரிடம் இருந்தது. அதை முறைப்படி திரு.யுவன் ஷங்கர் ராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றார். ஆகவே மாமனிதன் படத்தின் தலைப்பு எங்கள் படத்திற்கு உறுதியானது!” என தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த தலைப்பை பெற்றதால் படத்தின் முதல் பார்வை, பாடல்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: "டேய்.. சும்மா இர்ரா.. டேய்.. சும்மா இர்ரா!!".. SJ சூர்யாவின் நெஞ்சம் மறப்பதில்லை.. மிரட்டலான SneakPeak!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi seenu ramasamy maamanithan மாமனிதன்

People looking for online information on Seenu ramasamy, Vijay Sethupathi will find this news story useful.