Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

விஜய் சேதுபதி மிரட்டும் யாதும் ஊரே யாவரும் கேளிர் டீசர் ...நொடிக்கு நொடி பரபரப்பு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர் நடிப்பில் மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளீர் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் யாதும் ஊரே யாவரும் கேளீர் திரைப்படம் குறித்து பிரத்யேக பிரத்தியேக டீசர்  வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல இயக்குநரான மகிழ் திருமேணி நடிக்கவுள்ளாராம்.

vijay sethupathi new film teaser released யாதும் ஊரே யாவரும் கேளிர் டீசர்

மேலும் இவர் படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கிறார் என்றும் நமது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெங்கட கிருஷ்ணா ரோக்நாத் இயக்கும் இப்படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடிக்கிறார். அடுத்தாக அந்தாதூன் திரைப்படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் அடுத்து இயக்கப் போகும் படத்தில் நமது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட்டின் பிரபல நடிகை கத்ரீனா கைஃப் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு 'மெர்ரி கிறிஸ்மஸ்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ரமேஷ் டுரானி தயாரிக்கிறார். மேலும் புனேவில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வரும் ஏப்ரல் மாதத்தில் படம் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் மூலம் ஹிந்தியிலும் விஜய் சேதுபதி முத்திரை பதிப்பார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

விஜய் சேதுபதி மிரட்டும் யாதும் ஊரே யாவரும் கேளிர் டீசர் ...நொடிக்கு நொடி பரபரப்பு..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

vijay sethupathi new film teaser released யாதும் ஊரே யாவரும் கேளிர் டீசர்

People looking for online information on Vijay Sethupathi will find this news story useful.