கமல்ஹாசனின் 'இந்தியன் 2’ ஆரம்பம் - ஷூட்டிங்கிற்கு தயாரான பிரபலம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 12, 2019 11:44 AM
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் இணைந்திருப்பது குறித்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 1996ம் ஆம் ஆண்டு ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹீட்டானது. இந்நிலையில், சுமார் 23 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘இந்தியன் 2’ உருவாகி வருகிறது. கமல்ஹாசன், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு உள்ளிட்டோர் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட் செலவில் லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில், நடிகை பிரியா பவானி ஷங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத், நடிகர்கள் வித்யூத் ஜாம்வால், சித்தார்த் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். இதில் நடிகை ரகுல் ப்ரீத் தனது பகுதிகளுக்கான ஷூட்டிங்கை தொடங்கியிருப்பதாக தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஷூட்டிங்கிற்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் இன்று (ஆக.12)ம் தேதி சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த ஷெடியூலில் சித்தார்த் மற்றும் பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் உள்ளிட்டோரின் காட்சிகள் படமாக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் 2021ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.