'96' இயக்குநருடன் மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 02, 2019 08:22 PM
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகவிருக்கும் ‘துக்ளக் தர்பார்’ திரைப்படத்தில் புதிதாக இரண்டு இயக்குநர்கள் இணைந்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் ‘துக்ளக் தர்பார்’ திரைப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.
அரசியல் ஃபேன்டஸி டிராமாவா உருவாகவிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அதிதி ராவ் ஹிதாரி நடிக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதைத் தொடர்ந்து இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘96’ திரைப்பட இயக்குநர் பிரேம்குமார் மற்றும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ படங்களை இயக்கிய பாலாஜி தரணிதரனும் இணைந்துள்ளனர். துக்ளக் தர்பார் திரைப்படத்திற்கு பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுகிறார்.
தற்போது விஜய் சேதுபதி ‘சங்கத் தமிழன்’,‘கடைசி விவசாயி’,‘லாபம்’, ‘மாமனிதன்’, முத்தையா முரளிதரனின் பயோபிக் உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளன.