இதற்காகத் தான் விஜய்சேதுபதியை சிவாஜியுடன் ஒப்பிட்டேன் - பிரபல இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பாண்டவர் பூமி', 'வெற்றிக்கொடிகட்டு', 'ஆட்டோகிராஃப்' போன்ற புகழ் பெற்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் சேரன்.  தற்போது இவரது இயக்கத்தில் 'திருமண'ம் திரைப்படம் வெளியானது.

Charen clarifies why compared Vijay Sethupathi with Sivaji Ganesan

இந்நிலையில் இயக்குநர் சேரன் 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் குறித்து வெளியிட்ட பதிவில்,  தனது ட்விட்டர் பக்கத்தில், முதலில் அரவாணியாக நடிக்க சம்மதித்தது. அதிலும் அரவாணிகளின் மறைக்கப்பட்ட தோற்றத்தை அப்படியே கண்முன் கொண்டுவர சம்மதித்து ஒப்பணையில் காட்டியது.

தன்னை பற்றிய இமேஜ் பற்றி கவலைப்படாமல் தன் தொழில், திறமை மீது மட்டும் வைத்த நடிகன் ..... சல்யூட் விஜய்சேதுபதிக்கு.. இன்னொரு சிவாஜி. என்று குறிப்பிட்டிருந்தார்.

இவர் இன்னொரு சிவாஜி என்று குறிப்பிட்டதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதிலளித்த அவர், விஜய்சேதுபதி அவர்களை மரியாதைக்குரிய சிவாஜி அவர்களோடு ஒப்பிட்டது கதாப்பாத்திரங்களை எந்த இமேஜும் பார்க்காமல் தேர்ந்தெடுக்கும் விதத்திலும் அதற்காக இயக்குநரின் தேவை அறிந்து மெனக்கெடும் விதத்திலும் தான்.. மற்றபடி சிவாஜிக்கு இணையாக குறிப்பிடவில்லை.. அது அவருக்கும் தெரியும்.