‘ராஜாவுக்கு செக்’ வைக்கும் சேரன் - ஸ்ருதிஹாசன் வெளியிட்ட வேற லெவல் வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குநரும், நடிகருமான சேரனின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜாவுக்கு செக்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகை ஸ்ருதிஹாசன் இன்று வெளியிட்டார்.

Actress Shruti Haasan released Cheran's Rajavukku Check Motion Poster

இயக்குனர் சாய் ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராஜாவுக்கு செக்’ திரைப்படத்தில் சரயூ மோகன், நந்தனா வர்மா, சிருஷ்டி டாங்கே மற்றும் இர்பான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகை ஸ்ருதிஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கெட்டப்பில் சேரன் நடித்துள்ள இப்படம்  எமோஷனல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.

மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் இந்தப் படத்தை பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கின்றனர்.

பிரபல ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தெலுங்கு திரைப்பட இசையமைப்பாளர் வினோத் யஜமானியா இசையமைக்கிறார்.

‘ராஜாவுக்கு செக்’ வைக்கும் சேரன் - ஸ்ருதிஹாசன் வெளியிட்ட வேற லெவல் வீடியோ..! வீடியோ