விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இணைந்து 'சேரா' என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் அமிதாப் பச்சன், நயன்தாரா, சுதீப் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை சிரஞ்சீவியின் மகனும் பிரபல நடிகருமான ராம் சரண் தயாரித்துள்ளார்.
இதனையடுத்து பிரபல தெலுங்கு இயக்குநர் சுகுமார் கதை எழுதி தயாரிக்கும் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை புஜ்ஜி பாபு சனா இயக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் மலையாளத்தில் ஜெயராமுடன் இணைந்து 'மார்கோனி மதாய்' என்கிற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை சஜன் கலத்தில் இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
#MARCHONIMATHAI ☺️☺️☺️☺️☺️ pic.twitter.com/DUySxqzYkP
— VijaySethupathi (@VijaySethuOffl) June 9, 2019