ஜி.வி.பிரகாஷ் தற்போது சித்தார்த்துடன் இணைந்து நடித்த 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை 'சொல்லாமலே', 'பூ', 'பிச்சைக்காரன்' படங்களின் இயக்குநர் சசி இயக்கியுள்ளார்.

இதனையடுத்து ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் படம் 'ஐங்கரன்'. இந்த படத்தை அதர்வா நடித்த 'ஈட்டி' படத்தை இயக்கிய ரவி அரசு இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷின் ஜோடியாக மஹிமா நடித்துள்ளார்.
இந்த படத்தை காமன்மேன் புரொடக்ஷன் சார்பாக பி.கணேஷ் தயாரித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்ஷன் தயாரித்திருந்தது.
லிப்ரா புரொடக்ஷன் சார்பாக கடந்த மே 17 ஆம் தேதி வெளியான நட்புனா என்னனு தெரியுமா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.