‘கூட மேல கூட வச்சி.. ’- மீண்டும் இணையும் ‘ரம்மி’ ஜோடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi - Aishwarya Rajesh's new film titled as Ka Pae Ranasingam, Produced by KJR Studios

'அறம்', 'ஐரா', ‘தும்பா’ உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.  'திருடன் போலீஸ்', 'இமைக்கா நொடிகள்', 'கதாநாயகன்' உள்ளிட்ட படங்களை போல், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

பி.விருமாண்டி இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு ‘க/பெ. ரணசிங்கம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று(ஜூன்.10) தொடங்கியது. ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘தர்மதுரை’ படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கவுள்ளனர்.

கிராமத்து கதைக்களத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.