விஜய் சேதுபதி தற்போது மலையாளத்தில் ஜெயராமுடன் இணைந்து 'மார்கோனி மதாய்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழில் அவர் நடித்துவரும் படம் 'சங்கத்தமிழன்'. இந்த படத்தை 'வாலு', 'ஸ்கெட்ச்' படங்களின் இயக்குநர் விஜய் சந்தர் இயக்குகிறார். இந்த படத்தை விஜயா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் இந்த படத்துக்கு இசையமைக்கின்றனர். இந்த படத்தில் ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், சூரி, நாசர் ஜான் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். குற்றாலத்தில் நடைபெற்றுவந்த இந்த படத்தின் நான்காவது கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதாம்