மயில்சாமியிடம் இருக்கும் பல நல்ல விஷங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் - விஜய் சேதுபதி
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 24, 2019 12:44 PM
எம்ஜே.உசைன் இயக்கத்தில் நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி கதாநாயகனாக அறிமுகமாகும் மர்ம திரில்லர் திரைப்படம் அல்டி.

அல்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராதாரவி, இயக்குநர் பாக்யராஜ், ஜாக்குவார் தங்கம், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அன்பு மயில்சாமியின் பிறந்த நாளன்று அவர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தியதில் மிக்க மகிழ்ச்சி என்றார். மேலும் அவர் பேசுகையில், மயில்சாமி அண்ணனின் நடிப்பும் நகைச்சுவையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மீது ஒரு தனி மரியாதை உண்டு. அவர் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்தாலும், அதில் அவரின் தனித்துவம் இருக்கும்.
மிகவும் வித்தியாசமாகவும் தெளிவாகவும் இருப்பது அவரது ஸ்பெஷல். அவரிடம் இருந்து நிறைய நல்ல விஷயங்களை கற்று கொள்ளலாம். நானும் நிறைய கற்றுகொண்டுள்ளேன். என்னுடைய சிறு வயதில் நான் மயில்சாமி அண்ணனின் மீண்டும் மீண்டும் சிரிப்பு என்ற கேசெட்டை அடிக்கடி கேட்டுள்ளேன். யாருக்கும் அறிவுரை கூறுவது எனக்கு பிடிக்காது. அதனால் ஒரு ஆலோசனையாக அன்பு மயில்சாமிக்கு கூறுவது என்னவென்றால், அவரின் தந்தையிடம் இருந்து அவர் நிறைய கற்று கொள்ளலாம் என்றார் விஜய் சேதுபதி. மேலும், அவர் அப்படத்தின் கதாநாயகியான மனிஷா ஜித் தமிழில் இந்த விழாவில் பேசியதற்கு நன்றி என்றும் அந்த கதாநாயகியையும் பாராட்டி பேசினார்.
மயில்சாமியிடம் இருக்கும் பல நல்ல விஷங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் - விஜய் சேதுபதி வீடியோ