மக்கள் செல்வனின் ‘சங்கத்தமிழன்’ புதிய ரிலீஸ் தேதி இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘சங்கத்தமிழன்’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi's Sangathamizhan releasing on November 15th

‘வாலு’, ‘ஸ்கெட்ச்’ உள்ளிட்ட படங்களைஇயக்கிய இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை தவிர சூரி, நாசர் ஜான் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விவேக் - மெர்வின் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முதன்முறையாக இரட்டை வேடங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சங்கத்தமிழன்’ திரைப்படத்திற்கு சமீபத்தில் தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக, இப்படம் கடந்த (அக்.11)ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது, பின்னர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், தீபாவளி பண்டிகையின் போது ‘பிகில்’ மற்றும் ‘கைதி’ போன்ற படங்கள் ரிலீசாவதால், திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் ‘சங்கத்தமிழன்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம், வரும் நவம்பர் 15ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.