திருமணம் செய்துகொள்ள போகும் கன்னட பிக்பாஸ் ஜோடி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 24, 2019 12:40 PM
தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி,தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப் பிரபலம். ஒரு வீடு, 100 நாட்கள் என அந்த நிகழ்ச்சியின் கான்சப்டே சுவாரஸியமாக இருந்தது முக்கிய காரணம்.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் காதல் வயப்படும் நிகழ்வு அடிக்கடி நிகழ்வது வழக்கம். ஆனால் வெகு நேரங்களில் மட்டுமே அந்த காதல் கல்யாணம் வரை வந்துள்ளது. மலையாளம் ஸ்ரீநிஷ் அரவிந்த் மற்றும் பியேர்லே மானே உள்ளிட்டோர் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக கன்னட பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சந்தன் ஷெட்டி மற்றும் நிவேதா கௌடா இருவரும் காதலிக்கத் தொடங்கினர் . இந்நிலையில் தற்போது இருவருக்கும் திருமணம நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. சந்தன் ஷெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : Bigg boss, Kannada, Chandan Shetty, Nivetha Gowda