தீபாவளிக்கு ‘பிகில்’ படத்துடன் மோதுகிறதா ‘சங்கத்தமிழன்’? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘சங்கத்தமிழன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Vijay Sethupathi's Sangathamizhan is not releasing for Diwali

‘வாலு’, ‘ஸ்கெட்ச்’ உள்ளிட்ட படங்களைஇயக்கிய இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை தவிர சூரி, நாசர் ஜான் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விவேக் - மெர்வின் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முதன்முறையாக இரட்டை வேடங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சங்கத்தமிழன்’ திரைப்படத்திற்கு சமீபத்தில் தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில், இப்படம் இன்று (அக்.11) ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது, பின்னர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘மிக மிக அவசரம்’ திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகர் கூறுகையில், ‘சங்கத்தமிழன்’ தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாகவில்லை. நவ.8 அல்லது நவ.15 ஆகிய தேதிகளில் ரிலீசாகலாம். அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.