பிகிலுக்கு பிறகு விஜய் - விஜய் சேதுபதி இணையும் தளபதி 64 பட அப்டேட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 23, 2019 02:58 PM
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள 'பிகில்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் எமோஜியை தளபதி விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து விஜய் 'மாநகரம்', 'கைதி' படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 64' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்டனி வர்க்கீஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.
இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 3 வது வாரத்தில் டெல்லியில் தொடங்கவிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.