இந்த ஹீரோ படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 17, 2019 11:22 AM
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சங்கத் தமிழன்'. விஜயா புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்த படத்தை விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், சூரி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். இதனையடுத்து விஜய் சேதுபதி 'தளபதி 64', 'லாபம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் 'ஓ மை கடவுளே' படத்தில் விஜய் சேதுபதி ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ரித்திகா சிங், வாணி போஜன், ஷாரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
லியோன் ஜேம்ஸ் இசையமைக்கும் இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்குகிறார். இந்த படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.