விஜய் தந்தை SAC நடிப்பில் ‘அகிம்சை கொல்லும்’ … இணையத்தில் வைரலாகும் குறும்படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

 

Vijay father SAC acted short film in Behindwoods

விஜய்யின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் நடித்துள்ள அகிம்சை கொல்லும் என்ற குறும்படம் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.

இயக்குனர் SAC…

1980 களில் பல பரபரப்பான படங்களை இயக்கியவர் எஸ் ஏ சந்திரசேகர். அவரும் விஜய்காந்தும் இணைந்து உருவாக்கிய பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. இவரது படங்களில் அரசியல் கருத்துகளும், கூர்மையான வசனங்களும் இடம்பெற்று ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. இதனால் இவரை புரட்சி இயக்குனர் என்றும் ரசிகர்கள் அழைத்து வந்தனர்.

Vijay father SAC acted short film in Behindwoods

நடிகராக SAC…

90 களில் தன் மகன் விஜய்யை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி பல படங்களை இயக்கி தயாரித்தார். ஒரு கட்டத்தில் திரைப்படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் படங்களில் நடிக்கவும் தொடங்கினார். தனுஷின் கொடி மற்றும் சிம்புவின் மாநாடு ஆகிய திரைப்படங்களில் அரசியல்வாதி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். கடைசியாக எஸ் ஏ சந்திரசேகர் ‘நான் கடவுள் இல்லை’ என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் சமுத்திரக்கனி நடித்திருந்தார்.

Vijay father SAC acted short film in Behindwoods

அகிம்சை கொல்லும்…

இந்நிலையில் தற்போது எஸ் ஏ சி நடிப்பில் உருவாகியுள்ள ‘அகிம்சை கொல்லும்’ என்ற குறும்படம் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த குறும்படத்தை இயக்குனர் மதன் இயக்கியுள்ளார். பிஹைண்ட்வுட்ஸ் யுடியூப் சேனலில் எக்ஸ்கூளிஸிவாக இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Vijay father SAC acted short film in Behindwoods

People looking for online information on Agimsai kollum, S A Chandrasekar, Short Film will find this news story useful.