www.garudabazaar.com

"பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி குறும்படம் இயக்குறாரா?".. இதுதான் கான்செப்டா? Trending தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் உருவாகும் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கும் ராஜமௌலி இப்படத்துக்கு முன்னதாக தமது குறும்படத்தை முடிக்கும் முனைப்பில் அவர் இருப்பதாக ஹைதராபாத் வட்டார செய்திகள் கூறுகின்றன.

SS Rajamouli directs short film during the pandemic?

இயக்குநர் ராஜமௌலி பிரம்மாண்ட திரைப்பட இயக்குநராக அறியப்படுபவர். தற்போது ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார். ஊரடங்கு காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,  மீண்டும் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டதும் பட வேலைகளை தொடங்க படக்குழு தயார் நிலையில் உள்ளது.

SS Rajamouli directs short film during the pandemic?

இதனிடையே இந்த பேரிடர் அல்லது பெருந்தொற்று காலத்தில் காவல்துறையினரின் பங்களிப்பையும், அவர்களின் அர்ப்பணிப்பையும் உணர்த்தும் 20 நிமிட ஒரு குறும்படத்தை இயக்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக தெலுங்கானா காவல்துறை அதிகாரிகளை அவர் சந்தித்துள்ளதாகவும் தெலுங்கானா செய்திகள் குறிப்பிடுகின்றன.

SS Rajamouli directs short film during the pandemic?

இந்த குறும்படத்தை தமது ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பை தொடங்கும் முன், ராஜமௌலி இயக்கி முடிக்கும் முனைப்பில் இருப்பதாகவும் அந்த செய்திகள் கூறுகின்றன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

SS Rajamouli directs short film during the pandemic?

People looking for online information on Jr ntr, Junior NTR, Ram Charan, Ram Charan Teja, RRRMovie, SS Rajamouli will find this news story useful.