ஜெயம் ரவியின் ‘அகிலன்’ படத்தின் டீசர் எப்ப?... மிரட்டலான மேக்கிங் வீடியோவோடு வெளியான தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயம் ரவி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் அகிலன் திரைப்படம் உருவாகி வருகிறது.

Jayam Ravi agilan movie shoot wrapped teaser update

மீண்டும் இணைந்த பூலோகம் கூட்டணி…

‘பூலோகம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன், ஜெயம் ரவி நடிப்பிலான தமது அடுத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 28வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் தொடங்கி, பின்னர் தூத்துக்குடி வரை நடந்துகொண்டிருந்தது. ஸ்கிரீன் சீன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த இப்படத்தில் ஜெயம் ரவி, ப்ரியா பவானி சங்கர் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் வத்திக்குச்சி, காலா, ரைட்டர் படங்களில் நடித்த திலீபன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்துக்கு சாம் சி எஸ் இசை அமைக்கிறார். விவேக் ஒளிப்பதிவை கையாள, விஜய் முருகன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றுள்ளார்.

Jayam Ravi agilan movie shoot wrapped teaser update

படப்பிடிப்பு…

துறைமுகத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடியிலும், சில முக்கிய காட்சிகள் சென்னை காசிமேட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன. 80 சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் குஜராத்தில் உள்ள மிகப்பெரிய கண்டெய்னர் தளத்திலும் படப்பிடிப்பை இயக்குனர் நடத்தியுள்ளார்.

Jayam Ravi agilan movie shoot wrapped teaser update

டீசர் எப்போது?

இந்த படத்தில் ஜெயம் ரவி கப்பல் மாலுமியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் பிரியா பவானி சங்கர் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இதையடுத்து இப்போது படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர். தற்போது வெளியாகியுள்ள டீசர் இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Jayam Ravi agilan movie shoot wrapped teaser update

தொடர்புடைய இணைப்புகள்

Jayam Ravi agilan movie shoot wrapped teaser update

People looking for online information on Agilan, Jayam Ravi, Kalyana krishnan, Priya bhavani sankar will find this news story useful.