பூஜா ஹெக்டே, ஹன்சிகா, தமன்னா… நீளும் பட்டியல்… களைகட்ட போகும் ‘தி லெஜண்ட்’ ஆடியோ Launch…

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தி லெஜண்ட் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வரும் மே 29 ஆம் தேதி நடக்க உள்ளது.

Famous actresses in ‘The legend’ movie audio trailer launch

தி லெஜண்ட்…

சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப் படங்கள் மூலம் தமிழக மக்களிடையே பிரபலம் அடைந்தவர் அந்த கடைகளின் அதிபர் அருள் சரவணன். இதைத் தொடர்ந்து தற்போது கதாநாயகனாக அடியெடுத்து வைத்துள்ளார். அவர் நடிப்பில் ஜேடி –ஜெர்ரி விளம்பர பட இயக்குனர்கள் இயக்கும் புதிய படத்துக்கு ’தி லெஜண்ட்’ என்றே பெயர் வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர்கள் ஜேடி – ஜெர்ரி இதற்கு முன்னர் உல்லாசம் மற்றும் விசில் ஆகிய படங்களை இயக்கியவர்கள். அதன் பிறகு நூற்றுக்கணக்கான விளம்பர படங்களை இயக்கியவர்கள். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களையும் அவர்களே இயக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Famous actresses in ‘The legend’ movie audio trailer launch

பிரபல கலைஞர்கள்…

லெஜண்ட் படத்தில், ஊர்வசி ரவுத்தலா தி லெஜன்ட் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். அதே போல, மறைந்த ஜனரஞ்சக கலைஞன் என அனைவராலும் பாராட்டப்பட்ட விவேக் கடைசியாக நடித்த படமும் தி லெஜண்ட் தான். இவர்களுடன் யோகிபாபு, விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தி லெஜண்ட் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஆர் வேல்ராஜ் மேற்கொண்டுள்ளார், ரூபன் எடிட் செய்கிறார், கலை அமைப்பு பணிகளை எஸ் எஸ் மூர்த்தி கவனிக்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார். சண்டைப்பயிற்சியை அனல் அரசு கையாள்கிறார். ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் ஆகியோர் நடன பணிகளை மேற்கொள்கிறார்கள். வைரமுத்து, கபிலன், பா விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளார்கள். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து ரிலீஸ் வேலைகள் தொடங்கியுள்ளன. படத்தின் முன்னோட்டமாக சில போஸ்டர்களும் மோஷன் போஸ்டர்களும் ரிலீஸாகி கவனத்தை ஈர்த்தன.

இதன் முதல் சிங்கிளான  ‘மொசலோ மொசலு’ பாடல், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பா விஜய் பாடல் வரிகளை இயற்ற, அர்மான் மாலிக் பாடியுள்ளார். மேலும், ராஜு சுந்தரம் இந்த பாடலுக்கு நடனம் அமைத்திருந்தார். அதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாடலான பென்னி தயாள் மற்றும் ஜொனிதா காந்தி பாடி கவிஞர் சினேகன் எழுதிய 'வாடி வாசல்' சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் ஒரு கோடி பார்வைகளை கடந்து வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது.

Famous actresses in ‘The legend’ movie audio trailer launch

ஆடியோ & டிரைலர் வெளியீடு…

இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வரும் மே 29 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளான தமன்னா, ஹன்சிகா, பூஜா ஹெக்டே, ஸ்ரத்தா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், ஸ்ரீலீலா, டிம்பிள் ஹயாத்தி, நுபுர் சனோன், ஊர்வசி ரவுத்தேலா மற்றும் ராய்லட்சுமி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது சம்மந்தமாக வெளியிட்டுள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Famous actresses in ‘The legend’ movie audio trailer launch

Famous actresses in ‘The legend’ movie audio trailer launch

People looking for online information on Arul saravanan, Audio launch, The legend will find this news story useful.