www.garudabazaar.com

பிரபல ‘வெள்ளித்திரை’ ஹீரோ.. ஹீரோயின் நடித்துள்ள ஷார்ட் ஃபிலிம்.. வெளியானது செம்ம டீசர்..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒன்றாக எண்டர்யின்மெண்ட் சேனலில் அசோக் செல்வன் நடிக்கும் குறும்படம் ஒன்றின் டீசரை பகிரப்பட்டுள்ளது.

Ashok Selvan Priya Anand Maya short film ondraga entertainment

இந்த குறும்படத்தில் நடிகர் அசோக் செல்வன் மற்றும் ப்ரியா ஆனந்த் நடித்துள்ளனர். இந்த குறும்படத்தின் டீசரில் தான் ஒரு அசோக் செல்வன் ஒரு டேபிளில் அமர்ந்து எழுதிக்கொண்டிருக்க, இன்னொருபுறம் சமையலராக சமைக்கும் பணி செய்யும் செஃப் உடை அணிந்த படி இன்னொரு அசோக் செல்வனும், அவருடன் ப்ரியா ஆனந்தும் வருகின்றனர்.

Ashok Selvan Priya Anand Maya short film ondraga entertainment

இந்த டீசர் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்டின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அத்துடன் இந்த குறும்படம் வரும் வெள்ளி அன்று ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படத்தை அனி வி சசி இயக்கியுள்ளார். Ron Ethan Yohann இசையமைத்துள்ளார். திவாகர் மணி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முன்னதாக தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் அசோக் செல்வன், நித்யா மேனன், ரீது வர்மா நடித்த தீனி திரைப்படத்தையும் அனி வி சசி தான் இயக்கியிருந்தார். ஜூ5-ல் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திலும் அசோக் செல்வன் செஃபாக வருவார்.

ALSO READ: "பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி குறும்படம் இயக்குறாரா?".. இதுதான் கான்செப்டா? Trending தகவல்.

Ashok Selvan Priya Anand Maya short film ondraga entertainment

People looking for online information on Ani I V Sasi, Ashok Selvan, Maya, Theeni will find this news story useful.