விஜய் சேதுபதி நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்'.. படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

"காத்துவாக்குல ரெண்டு காதல்" படத்தின் உலகளாவிய வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

Kaathu Vaakula Rendu Kaadhal Movie Box Office Collection

'நானும் ரௌடிதான்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி மூவரும் இரண்டாவது முறையாக இணைந்த படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்".

இவர்களோடு சேர்ந்து சமந்தாவும் இந்த படத்தில் இணைந்தார். மாஸ்டர் மற்றும் கோப்ரா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லலித் குமார் வழங்க விக்னேஷ் சிவன்  தன்னுடைய ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக இப்படத்தை தயாரித்து இருந்தார்.

Kaathu Vaakula Rendu Kaadhal Movie Box Office Collection

இந்த படத்துக்கு விக்னேஷ் சிவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  கடந்த மாதம்  ஏப்ரல் 28 அன்று இந்த படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ரெட்ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட்டது.

இந்த படம் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையில் படத்தின் மொத்த வசூல் நிலவரத்தை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் அறிவித்துள்ளது. அதன்படி இந்த படம் உலகம் முழுவதும் 66 கோடி ரூபாயை வசூலித்து உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Kaathu Vaakula Rendu Kaadhal Movie Box Office Collection

இந்த படத்தில் காதீஜா எனும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க, கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க, ராம்போ என்ற கதாபாத்திரத்தி விஜய் சேதுபதி நடித்தார்.

இந்த படம் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் பெறப்பட்டது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 39 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் கடந்த மே மாதம் 20 ஆம் தேதி முதல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Kaathu Vaakula Rendu Kaadhal Movie Box Office Collection

People looking for online information on Kaathuvaakula Rendu Kaadhal, KRK, Nayanthara will find this news story useful.