சிம்பு - வெங்கட் பிரபுவின் 'மாநாடு' - மீண்டும் வில்லனாகும் பிரபல ஹீரோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்பு தனது பிறந்தநாளை 'மாநாடு' டீமுடன் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் சிம்பு ரசிகர்களால் வைரலாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 'மாநாடு' படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டார்.

Venkat Prabhu and STR's Maanaadu , SJ Suryah to Play Antagonist in the movie

அதன் படி இந்த படத்தில் இயக்குநர் பாராதிராஜாவின் மகனும், பிரபல நடிகருமான மனோஜ் பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் போப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக முதலில் அரவிந்த் சாமி நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி அரவிந்த் சாமிக்கு பதிலாக 'மாநாடு' படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருக்கிறாராம். 'தலைவி' படத்தின் படப்பிடிப்பம் இந்த படத்தின் படப்பிடிப்பும்  கிட்டத்தட்ட ஒரே நாட்களில் நடைபெறுவதால் அரவிந்த் சாமியால் மாநாடு படத்தில் நடிக்க முடியவில்லையாம்.

Entertainment sub editor