’விஜய் தேவரகொண்டா கிட்ட நான் சொல்ல நெனச்சன், என்கிட்ட அவரே சொல்லிட்டார்’-ஐஷ்வர்யா ராஜேஷ்
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஐஷ்வர்யா ராஜேஷ். ’காக்கா முட்டை’ படத்தில் அறிமுகமான அவர் வட சென்னை, கனா, செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்தார். இவர் நடிப்பு படத்துக்குப் படம் மெருகேறி வருகிறது.

சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, சாந்தனுவுடன் இவர் நடித்த ’வானம் கொட்டட்டும்’ திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீசாகிறது. இதைத்தொடர்ந்து Behindwoods TV சேனலுக்கு பேட்டி தந்த அவர் ’வானம் கொட்டட்டும்’ பட அனுபவத்தோடு, தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த ’வெர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ திரைப்படத்தில் நடித்த அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். மேலும் அவரது எதிர்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
’விஜய் தேவரகொண்டா கிட்ட நான் சொல்ல நெனச்சன், என்கிட்ட அவரே சொல்லிட்டார்’-ஐஷ்வர்யா ராஜேஷ் வீடியோ