நயன்தாரா நடித்து நீண்டநாட்களாக தயாரிப்பில் இருந்த படம் 'கொலையுதிர் காலம்'. இந்த படத்தை 'உன்னை போல் ஒருவன்', 'பில்லா 2' ஆகிய படங்களுக்கு பிறகு சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாராவை விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்துவருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் Behindwoods தளத்துக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அதில், அவராலேயே கட்டுப்படுத்த முடியாமல் பேசப்படுவது தான் இதெல்லாம். 'கொலையுதிர்காலம்' படத்தில் பேயாக நடிக்கிறார். பின்னர் சீதாவாக நடிக்கிறார் என ராதாரவி பேசியிருக்கிறார். உவமைக்காக கூட இப்படி பேசுவது மிகவும் தவறு. அதனை நகைச்சுவைக்காக அப்படி பேசியிருக்கிறார். ஆனால் அதிலிருக்கும் விளைவுகள் அவருக்கு புரியவில்லை.
'ராதா ரவி பின்னணி பேசுபவர்கள் சங்கத்தின் தலைவர். கடந்த வருடம் அக்டோபர் மாதம் சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்படுகிறார்'. இதுகுறித்து தொகுப்பாளர், தனஞ்செயனிடம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த அவர், இந்த விஷயத்தில் என்னுடைய ஆதரவு சின்மயிக்கு தான். சின்மயி 96 படத்தில் பாடல்கள் பாடி, பின்னணி பேசி அந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
இசையமைப்பாளர் அவர் விரும்பும் என் படத்தில் அவர் தான் பாடுவார் என அறிவித்தார். சின்மயி இந்தியா முழுவதும் ரசிக்கின்ற பாடகி. ரூ. 3000 கட்டவில்லை என்பதற்காக டெர்மினேட் செய்வது போன்றவை தனது பதவியை துஷ்பிரயோகம் செய்வது மாதிரி என்றார்.
இந்த விஷயத்துல சின்மயிக்கு தான் என்னுடைய ஆதரவு - பிரபல தயாரிப்பாளர் கருத்து வீடியோ