பிகிலுக்கு பிறகு விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் பிளான் - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 19, 2019 11:01 AM
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் பிகில். இந்த படத்தில் நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் தனது படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்ததையொட்டி, அந்த படத்தில் பணிபுரிந்த 300க்கும் மேற்பட்டோருக்கு தங்க மோதிரம் பரிசளித்தார்.
இதனையடுத்து தளபதி விஜய் மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். தளபதி விஜய்யின் 64வது படமாக உருவாகவுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கப்படவிருப்பதாக எங்களுக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் 2020 ஆம் ஆண்டு பண்டிகை தினம் ஒன்றில் வெளியாகும் என கூறப்படுகிறது.