www.garudabazaar.com

"நயன் Passport photo ல கூட பளபளனு.." விக்னேஷ் சிவன் போட்ட வைரல் பதிவு! மனுசன் love பண்றாப்ள 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நயன்தாராவின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை அவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

Vignesh Shivan Shared Nayanthara Passport Size Photo

Also Read | வாரிசு & துணிவு.. இதற்கு முன் ஒரே சமயத்தில் வெளியான அஜித் - விஜய் படங்கள்..

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

Vignesh Shivan Shared Nayanthara Passport Size Photo

திருமணத்திற்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கேரளாவில் உள்ள செட்டி குளங்கரா கோயிலுக்கும் சென்று ஜோடியாக விக்னேஷ் சிவன் & நயன்தாரா சாமி தரிசனம் செய்தனர்.

அதன் பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர்.

Vignesh Shivan Shared Nayanthara Passport Size Photo

சில வாரங்களுக்கு முன்  இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

இந்த பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்த பதிவை விரும்பினர். மேலும் பலர் அந்த பதிவில் நயன்தாரா & விக்னேஷ் சிவனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

Vignesh Shivan Shared Nayanthara Passport Size Photo

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நயன்தாராவின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை பகிர்ந்து, "பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் கூட பளபளக்கும் பந்தூரமே" என்ற காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் பாடல் வரிகளை எழுதி வெளியிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவனின் இந்த பதிவு, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் ஸ்க்ரீன் ஷாட்டாக பகிரப்பட்டு வருகிறது.

Also Read | ஜெயிலர் படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் அடுத்த 2 படங்கள்.. போட்டோவுடன் வெளியான அப்டேட்..

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Shared Nayanthara Passport Size Photo

People looking for online information on Nayanthara, Nayanthara Passport Size Photo, Vignesh shivan will find this news story useful.