www.garudabazaar.com

"அமுதவாணன் ஜோக்கரா சுத்திட்டு இருந்தாருங்கோ".. ADK பாடுன பாட்டு.. Chorus போட்ட ஹவுஸ்மேட்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொம்மை டாஸ்க் ஒன்றின் காரணமாக ஏராளமான பிரச்சனைகள் உருவாகி இருந்தது.

adk sings about amudhavanan housemates reacts

Also Read | பாத்ரூமில் வாந்தி எடுத்த தனலட்சுமி.. ஓடி போய் உதவிய ஆயிஷா.. "என்ன நடந்துச்சு?"

இதனால் கடந்த சில தினங்களாகவே ரணகளமாக தான் பிக்பாஸ் வீடும் இயங்கி வந்தது. இதில் ஷெரினாவுக்கு காயம் ஏற்பட்ட பின்னர் அடுத்தடுத்து ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டே தான் இருக்கின்றனர். ஆரம்பத்தில் மணிகண்டன் கோபம் அடைய, இதன் பின்னர் டாஸ்க்கில் ஏற்பட்ட மோதலால் அசீம், தனலட்சுமி, அமுதவாணன், விக்ரமன் உள்ளிட்ட பல போட்டியாளர்களிடையே மாறி மாறி விவாதங்கள் தான் நடந்து வருகிறது.

மேலும் தனலட்சுமிக்கு ஆதரவாக மகேஸ்வரி, ADK, அசீம் உள்ளிட்ட போட்டியாளர்களிடமும் விக்ரமன் கேள்வி கேட்கிறார். அதில், தனலட்சுமி தான் ஷெரினாவை தள்ளி விட்டார் என்பதில் உறுதியாக இருக்கிறார் அசீம். மறுபக்கம் அதில் உறுதி இல்லை என்றும் விக்ரம் கூறுகிறார். இதனால் வார இறுதியில் முறையான ஆவணங்களுடன் கமல்ஹாசன் வரும் போது தான் இந்த விவகாரத்தில் ஒரு தீர்வு கிடைக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

adk sings about amudhavanan housemates reacts

இதற்கு மத்தியில், Luxury Budget டாஸ்க்கும் நடைபெற்று வந்தது. இதிலும், மணிகண்டன், ஜனனி, ரச்சிதா, நிவா, தனலட்சுமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர். தற்போது பொம்மை டாஸ்க்கும் முடிவுக்கு வந்ததாக தெரியும் நிலையில், ஒவ்வொரு போட்டியாளர்களும் Worst Performer யார் என்பதையும் தெரிவிக்கின்றனர். இறுதியில், ஷிவின் மற்றும் அசீம் Worst Performer மற்றும் சிறப்பாக பங்கெடுக்காத நபர் என்றும் கூறி சிறை செல்லவும் பிக்பாஸ் கூறுகிறார்.

adk sings about amudhavanan housemates reacts

பொம்மை டாஸ்க் முடிவடைந்ததாக தெரியும் நிலையில், அமுதவாணன் குறித்து ADK பாடுவது தொடர்பான ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

அப்போது அமுதவாணன் பற்றி பாடும் ADK, "எல்லாரும் இப்ப கேளுங்கோ. இந்த வீட்டுல அமுதவாணன் இத்தனை நாளா ஜோக்கரா சுத்திட்டு இருந்தாருங்கோ. ஆஊன்னா ராம்ராஜு, இல்லன்னா சத்யராஜூ, வாய குடுத்தா பாஞ்சுருவாரு புலி போல, கடைசி வர இந்த ஆள விட்டு கொடுக்கல" என்ற படியே தொடர்ந்து பாட ஒரு சில போட்டியாளர்கள் Chorus பாட, மைனா, ஆயிஷா உள்ளிட்டோர் நடனமாடவும் ஆரம்பிக்கின்றனர்.

adk sings about amudhavanan housemates reacts

கடந்த சில நாட்களாக பொம்மை  டாஸ்க் காரணமாக பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து சண்டை நடைபெற்று வந்த நிலையில், தற்போது போட்டியாளர்கள் அனைவரும் கலகலப்பாகவும் இருப்பது பற்றி பார்வையாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Also Read | அசீம்க்கு சிறை.. உள்ள போறப்போ பேசுன பேச்சு.. ஒரே வார்த்தையில் சோலிய முடிச்ச மைனா 😅

தொடர்புடைய இணைப்புகள்

adk sings about amudhavanan housemates reacts

People looking for online information on ADK, Amudhavanan, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay Television, Vijay tv will find this news story useful.