bigg boss 6 tamil : “நயன்தாரா & சிம்ரன் ரெண்டு பேரோடயும் நடிக்கணும்” - பிக்பாஸில் பேசிய ஜிபி முத்து.!
முகப்பு > சினிமா செய்திகள்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதில் கவனிக்கத்தக்க போட்டியாளராக மாறி இருக்கிறார் ஜிபி முத்து. முன்னதாக முதல் நாள் ஜி பி முத்து பிக்பாஸ் வீட்டுக்குள் தனியே சென்றதாக சொல்லி புலம்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை மேலும் பயமுறித்திய நடிகர் கமல்ஹாசன் ஜாலியாக ரசித்தார். இதனை தொடர்ந்து தற்போது வார இறுதியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகை இந்த கமல்ஹாசன், ஜிபி முத்துவிடம் பாதாம் கொடுத்து அது என்ன என்று கேட்க, ஜிபி முத்து பாதாம் என்று சொல்ல, இது தெரிகிறது .. ஆதாம் தெரியவில்லையா? என கிண்டல் அடித்தார். அப்போதும், ஆதாம் எங்கே இருக்கிறார்? என்று வெள்ளந்தியாக ஜிபி முத்து கேட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது திரும்பவும் ஞாயிற்றுக்கிழமைக்கான எபிசோடில் ஜிபி முத்துவை கமல்ஹாசன் ஜாலியாக வறுத்தெடுப்பதை காண முடிகிறது.
அப்போது அசீம், “தலைவரே எந்த இரண்டு கதாநாயகிகளுடன் நீங்கள் நடிக்க விரும்புகிறீர்கள்?” என்று ஜிபி முத்துவிடம் அசீம் கேள்வி கேட்கிறார். இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. எனவே நடிகர் கமல்ஹாசன் முன், அசீம், ஜிபி முத்துவிட்டம் இப்படி கேள்வி கேட்கிறார் . அதற்கு ஜிபி முத்து, தான் நடிக்க விரும்பக்கூடிய அந்த இரண்டு கதாநாயகிகளின் பெயர்களை குறிப்பிடுகிறார். அதன்படி நயன்தாரா மற்றும் சிம்ரன் ஆகியோருடன் நடிக்க வேண்டும் என்று ஜிபி முத்து கூறக்கூடிய காட்சிகளை காண முடிகிறது. எனினும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து 2 பேரை சொல்ல சொல்லி கமல் கேட்கிறார். அதற்கான பதிலை எபிசோடில் காண முடியும்.