www.garudabazaar.com

AK62: விக்னேஷ் சிவன் பகிர்ந்த அஜித்தின் VINTAGE போட்டோ.. அந்த லுக்கு தான் ஹைலைட்டே! வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமாரின் வின்டேஜ் புகைப்படத்தை  விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

AK62 Director Vignesh Shivan Shared Vintage AjithKumar Movie Still

Also Read | தளபதி விஜய் நடிக்கும் 'வாரிசு'.. தமிழ், தெலுங்கு ஐரோப்பிய உரிமம் குறித்து வெளியான தகவல்!

சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் துணிவு படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது.  துணிவு படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார்.

ஐத்ராபாத்,  சென்னை & விசாகப்பட்டினத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. பின்னர் தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில்  நடந்த படப்பிடிப்பு சிலநாட்களுக்கு முன் நிறைவடைந்தது.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  நடிகர் அஜித்குமார் சிகரெட் புகைப்பது போன்ற கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, "♥️♥️♥️♥️" என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அஜித்குமாரின் மனோகர் கதாபாத்திரம் மிகவும் புகழ்பெற்ற கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.

துணிவு படத்தை அடுத்து நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்றது.  அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | கையில் குழந்தையுடன் நயன்தாரா 😍 நெகிழ்ச்சி பெயின்ட்டிங்கை பகிர்ந்த விக்னேஷ் சிவன்! Viral Photo

தொடர்புடைய இணைப்புகள்

AK62 Director Vignesh Shivan Shared Vintage AjithKumar Movie Still

People looking for online information on Ajith Kumar, AK62, Vignesh shivan will find this news story useful.