www.garudabazaar.com

நயன்தாரா - வினய் - சத்யராஜ் நடிக்கும் புதிய படம்.. வெளியான கலர்ஃபுல்லான தீபாவளி போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் புதிய வெளியாகி உள்ளது.

Nayanthara Vinay SathyaRaj Connect Movie Poster

நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டில் வெளியான 'மாயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன். 'மாயா' நயன்தாராவின் 50வது படமாகும், மேலும் இது தமிழ் சினிமாவின் சிறந்த திகில் படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 2015-ல் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் மாயாவும் ஒன்று. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய S R பிரபு தயாரித்து இருந்தார்.

பின்னர் 2018 ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இவர் இயக்கிய படம் ‘இறவாக்காலம்’.  படம் உருவாகி வருகிறது. அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு டாப்சி நடிப்பில் கேம் ஓவர் படத்தை இயக்கினார்.இந்தப் படத்தில், மர்மமான ஊடுருவல்காரர்களிடமிருந்து தனது வீட்டைப் பாதுகாக்கும் PTSD உடைய பெண்ணாக டாப்ஸி நடித்திருப்பார். அஸ்வின் சரவணன் இயக்கிய இந்த சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தை YNOT ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்தது.

தற்போது அஸ்வின் சரவணன் நயன்தாரா நடிப்பில் கனெக்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் அனுபம் கேர், வினய், சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்.

Nayanthara Vinay SathyaRaj Connect Movie Poster

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான சத்யராஜ், நயன்தாரா, வினய் போல்டரில் தோன்றியுள்ளனர். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara Vinay SathyaRaj Connect Movie Poster

People looking for online information on Connect, Nayanthara will find this news story useful.