www.garudabazaar.com

Nayanthara Vignesh Shivan : "இத்தன வருஷம் ஆச்சா?" ... நயன் - விக்கி பதிவு திருமணம் குறித்த பரபரப்பு Twist

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுக் கொண்டது தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

nayanthara and vignesh shivan register marriage details

இந்த நிலையில், அவர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்த தேதி குறித்தும் சுகாதாரத்துறை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதியன்று விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் சுற்றம் சூழ திருமணம் செய்து கொண்டனர். கடந்த பல ஆண்டுகளாக ஒருவருக்கு ஒருவர் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொண்ட விக்கி - நயன் ஜோடிக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

nayanthara and vignesh shivan register marriage details

இதற்கு மத்தியில், விக்கி - நயன் ஜோடி, சமீபத்தில் தங்கள் இரட்டை குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்திருந்தனர். வாடகைத்தாய் மூலம் அவர்கள் இரட்டைக் குழந்தைகள் பெற்றுக் கொண்ட நிலையில், பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

அதே வேளையில், திருமணமான 4 மாதங்களுக்குள் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை விக்கி மற்றும் நயன் ஆகியோர் பெற்றுக் கொண்டதால் வழிமுறைகளை பின்பற்றி இதனை செய்தார்களா என்ற கேள்வியையும் பலர் எழுப்பி இருந்தனர். இதன் பின்னர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக் கொண்டது குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிடப்படும் என அறிவித்திருந்தார்.

nayanthara and vignesh shivan register marriage details

இப்படி ஒரு சூழ்நிலையில், இதுகுறித்த அறிக்கை சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விதிகளை மீறி அவர்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்ளவில்லை என்பது உறுதியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதேபோல ICMR வழிமுறைப்படி தான் அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார்கள் என்பதும் உறுதியாகியுள்ளது.

மேலும், வாடகை தாய் அதற்குரிய தகுதியான வயதில் இருப்பதும், அவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளதும் தெரிய வந்தது. அது மட்டுமில்லாமல், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பதிவு திருமணம் செய்த தேதி குறித்த தகவலும் இந்த சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

அதன்படி கடந்த 11.03.2016 அன்று, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் இடையே பதிவு திருமணம் நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண பதிவு சான்றிதழின் உண்மைத் தன்மையும் பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

nayanthara and vignesh shivan register marriage details

இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர், கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதிவு திருமணம் தொடர்பான செய்தி குறித்த தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

nayanthara and vignesh shivan register marriage details

People looking for online information on Nayan wikki, Nayanthara, Vignesh shivan will find this news story useful.