www.garudabazaar.com

நயன்தாரா இல்லாம தான் டூர் போனும் போல.. விக்னேஷ் சிவன் போட்ட வைரல் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாரா ஐயா படம் மூலம் தனது கோலிவுட் அறிமுகத்தைத் தொடங்கினார்.

Vignesh Shivan about Nayanthara and holiday traveling

'வலிமை' படம் பார்த்த பாலிவுட் பிரபலம்... படம் குறித்து சொன்ன மிரட்டலான விமர்சனம்!

அதன்  பின் சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோகினி படங்கள் மூலம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். அதன் பின்னர் ரீ என்ட்ரி ஆகி ராஜாராணி, ஆரம்பம், அறம், விஸ்வாசம் படங்களில் அவர் தனது சிறந்த நடிப்புத் திறமையால் ரசிகர்களின் இதயங்களை வென்றதால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டார்.  இவர் கடைசியாக தமிழில் நெற்றிக்கண், அண்ணாத்த படங்களில் காணப்பட்டார்.

தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார். இது போக சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர், ஷாருக்கான் மற்றும் அட்லியின் படம், அல்போன்ஸ் புத்ரனின் கோல்ட் படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் காட்பாதர் படத்திற்கான படப்பிடிப்பை ஆரம்பித்தார் என செய்திகள் வெளியானது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக ஊடகங்களில் நயந்தாராவின் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "வேலையை முடித்துவிட்டு நீண்ட விடுமுறை எடுக்கக் காத்திருக்கிறேன் 😮😮😮😮❤️❤️❤️ மிஸ்ஸிங் Travels With Bae" என குறிப்பிட்டுள்ளார்.

Vignesh Shivan about Nayanthara and holiday traveling

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி இணையும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்". இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடிக்கின்றனர். லலித் குமார் தயாரிப்பில் முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கிறார்.  விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூரில் கடந்த 2020 ஆண்டு இறுதியில் தொடங்கி ஐத்ராபாத், சென்னையில் நடந்தது. பின்னர் கொரோணா காரணமாக படப்பிடிப்பு தாமதமானது.  இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் சென்ற ஆண்டு நிறைவுபெற்றது.

Vignesh Shivan about Nayanthara and holiday traveling

இந்த படம் சென்ற ஆண்டு டிசம்பரில் ஒடிடி ரிலீசை தவிர்த்துவிட்டு நேரடியாக தியேட்டரிக்கல் ரிலீசாக உள்ளது என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக டிசம்பர் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் டீசர் 11.02.2022 அன்று வெளியாகும் எனவும் இந்த படம் வரும் ஏப்ரலில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

உடல் அரசியலுக்கு ஆதரவாக களமிறங்கிய இலியனா! எடிட் செய்யாத ஒரிஜினல் PHOTO-வை வெளியிட்டு பரபரப்பு

Vignesh Shivan about Nayanthara and holiday traveling

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan about Nayanthara and holiday traveling

People looking for online information on நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டார், விக்னேஷ் சிவன், Holiday traveling, Nayanthara, Vignesh shivan will find this news story useful.