www.garudabazaar.com

"எல்லா வேலையும் செய்றாங்க.. அவங்க பேர யாரும் சொல்ல மாட்டீங்கல்ல?" - ஒரே போடாய் போட்ட பாலாஜி BBUltimate

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BiggBossUltimate: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அந்த தூண்டில் கேம் தொடங்கிவிட்டது. ஆம், பிக்பாஸ் வீட்டின் மிக சுவாரஸ்யமான பகுதி என்றால் இந்தப்பகுதியாகத்தான் இருக்கும். அதிலும் பிக்பாஸ் வீட்டில் கட்டப்பட்டுள்ள ஜெயிலில் ஒருநாள் குடியேறுவது யார் என்கிற பிரச்சினை வீட்டில் நூறு நாட்களுக்கும் ஒரு ஆணிவேர் பிரச்சனையாக இருக்கும்.

Balaji Straight farward fans celebrates BiggBossUltimate

சிறந்த பங்கேற்பாளர்கள் 

அந்த வகையில் வீட்டில் சிறந்த பங்கேற்பாளர்கள் யாரென்று தேர்ந்தெடுக்கும் பொறுப்பை போட்டியாளர்களிடம் பிக்பாஸ் ஒப்படைப்பார். அதன் மூலம் சிறப்பாக விளையாடிய இருவரை தேர்ந்தெடுக்கும் பணியில் பல்வேறு வாக்குவாதங்களும் பல்வேறு சண்டைகளும் நிகழும். அதில் பலவகையான எதிர்மறை கருத்துக்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்படும். அந்த சில விஷயங்களை எவிக்‌ஷனுக்கான நாமினேஷன்களிலும் மேற்கோள் காட்டி கூறப்படும்.

Balaji Straight farward fans celebrates BiggBossUltimate

பாலாஜி கருத்து

இதனால் நடந்து முடிந்த ஐந்து சீசனிலும் பல்வேறு தீப்பொறிகள் காட்டுத்தீயாய் பரவி வீட்டில் கொழுந்துவிட்டு எரிந்ததை பார்க்க முடிந்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் சிறப்பாக பங்கேற்றவர்கள் இருவரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஹவுஸ் மேட்ஸ் இறங்கியுள்ளனர். இதில், அனைவரது பெயரையும் யாராவது மேற்கோள் காட்டி கூறிவந்த நிலையில், பாலாஜி தெரிவித்த கருத்து பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

அவங்க பேர யாரும் சொல்ல மாட்டீங்கல்ல?

Balaji Straight farward fans celebrates BiggBossUltimate

பிக்பாஸ் வீட்டில் சிறப்பாக பங்கேற்றவர் யார் யாரென்ற கேள்விக்கு பலரும் பலரது பெயரை முன்மொழிந்த நிலையில், பாலாஜி, ஒருவரது பெயரை குறிப்பிட்டு சிறப்பாக பங்கேற்றவர் என தெரிவித்துள்ளார். மேலும், பேசிய பாலாஜி, அதில் "வீட்டில் எல்லா வேலையும் அதிகமா பார்ப்பது அவர் தான். பாத்திரமும் விளக்கிட்டு, அம்மியும் அரைச்சுட்டு, இதுபோக கிச்சன் டீம்லயும் இருக்காங்க", "ஆனா நீங்க யாரும் அவங்க பேரு சொல்லாதது தான் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு" என தெரிவித்துள்ளார்.

பரபரப்பு ப்ரோமோ

Balaji Straight farward fans celebrates BiggBossUltimate

எப்போதும் பரபரப்பாக காணப்படும் பிக்பாஸ் வீட்டில் அதிக ஆர்வத்தோடு மக்கள் பார்க்கக்கூடிய வகையில் பிக்பாஸ் ப்ரோமோ இருக்கும். அந்த வகையில் தற்போது சிறப்பாக பங்கேற்றவர்கள் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் பாலாஜியின் இந்த கருத்தால், வீடே பாலாஜியை அமைதியாக பார்ப்பது போலும், தாமரையும் அமைதியாக பாலாஜியை பார்ப்பது போல் ப்ரோமோ ரிலீஸ் ஆகியுள்ளது. இனி ஏதேனும் பிரச்சினை அதில் இருக்குமா என அடுத்தடுத்த ப்ரோமோவைக் காண பிக்பாஸ் அல்டிமேட் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

Also Read: எனக்கு ஒரு M**ம் தேவயில்ல- வனிதா ஆவேசம்..  இன்னுமா முடியல இந்த காபி பொடி பிரச்சன..

Also Read: "நான் வெரல காட்டிருவேன்".. "நீ காட்றீ".. வனிதா & சுரேஷ் சக்ரவர்த்தி.. அனல் பறக்கும் பிக்பாஸ் ஓடிடி

தொடர்புடைய இணைப்புகள்

Balaji Straight farward fans celebrates BiggBossUltimate

People looking for online information on பாலாஜி, பிக்பாஸ், Balaji Murugadoss, BBUltimateTamil, Bigg Boss OTT, Bigg Boss Ultimate, Bigg Boss Ultimate Tamil will find this news story useful.