www.garudabazaar.com

சாய் தன்ஷிகாவின் புதிய படம்.. முக்கிய வேடத்தில் பிக்பாஸ் ஓடிடி பிரபலத்தின் மனைவி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

முதன் முறையாக தன்ஷிகா இரட்டை வேடங்களில் நடிக்கும் மனோகரி எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.

Sai Dhanshika Manogari Bigg Boss Snehan wife kannika joins

சிட்தி திரைப்படம்

மகேஷ்வரன் நந்தகோபால் தனது சூர்யா பிலிம் புரொடக்ஸன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், அஜி ஜான், I.M.விஜயன் ஆகியோரது நடிப்பில் பயஸ் ராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் "சிட்தி" எனும் படத்தை தமிழ், மலையாளம் இருமொழிகளிலும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

விரைவில் திரையரங்கிற்கு வரவிருக்கிறது "சிட்தி" திரைப்படம். இதை தொடர்ந்து தற்போது தன்ஷிகா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் "மனோகரி" என்கிற படத்தை அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார்.

சினேகன் மனைவி கன்னிகா

முக்கிய வேடத்தில் கவிஞர் சினேகன் மனைவி கன்னிகா இந்த படத்தில் நடிக்கிறார். சினேகன் தற்போது பிக்பாஸில் இருக்கிறார்.  இந்நிலையில் இந்த படத்தில் கன்னிகா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் இளவரசு, ஆதித்யா கதிர், பிஜிலி ரமேஷ், ஜீவன் பாண்டியன், குடந்தை முத்து, இவர்களுடன் பிரபலமான கராத்தே மணியின் மகனான ராஜ்குமார் நடிக்கிறார்.  ராஜ்குமார், பல தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்திக்கிறார். அவர் தமிழில் தற்போது இந்த படம் மூலமாக வில்லனாக அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் ஆண்டி இந்தியன் ஜெயராஜ் ,தியேட்டர் ஆர்டிஸ்ட் ஜெகதீஸ்வரன், ஜாஹீர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்துக்கு K V.மணி ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.  படத்தின் அனைத்து பாடல்களையும் சினேகன் எழுதியிருக்கிறார். சூர்யா பிலிம் புரொடக்ஸன்ஸ் சார்பில் மகேஷ்வரன் நந்தகோபால். கதை, திரைகக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார்.

சிவாஜிக்கு, மனோகரா தன்ஷிகாவுக்கு மனோகரி.

இந்த படம் பற்றி இயக்குனர் நவாஸ் அகமது பேசும்போது, “நடிகர் திலகம் சிவாஜிக்கு, மனோகரா போல், நடிகை தன்ஷிகாவுக்கு மனோகரி. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற மனோகரா திரைப்படத்தை போலவே, இன்றைய நவீன தொழிட்நுட்பங்களை பயன்படுத்தி VFX காட்சிகள் நிறைந்த மனோகரி திரைப்படத்தை உருவாக்கி வருகிறோம். இதுவரை தன்ஷிகா நடித்திராத கதாபாத்திரம் இந்த படத்தில். செண்டிமெண்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம் இது.

படப்பிடிப்பு கம்பத்தில் பூஜையுடன் துவங்கியுள்ளது. தொடர்ந்து கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: யப்பா சாமி.. சிம்பு 105 KG-ஐ குறைச்சதுக்கு பின்னால இவ்ளோ இருக்கா.. கண்ணீரை வரவழைக்கும் 'அட்மேன்' ..

Sai Dhanshika Manogari Bigg Boss Snehan wife kannika joins

People looking for online information on Dhanshika, Sai Dhanshika will find this news story useful.