www.garudabazaar.com

Vanitha: "அம்மாவுக்கு Secret-அ வெச்சுக்க தெரியாது" .. வனிதா மகள் ஜோவிகா BiggBossUltiamate

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BiggBossUltiamate: விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களாக நடந்துகொண்டிருந்தது.

My Mom dont have secret BiggBossUltimate Vanitha Daughter Jovika

பிக்பாஸ் ஓடிடி

5வது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராஜூ வெற்றி பெற்றிருந்தார். அவருக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓடிடி வெர்ஷன் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

போட்டியாளர்கள்

My Mom dont have secret BiggBossUltimate Vanitha Daughter Jovika

இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் எபிசோடு விஜய் டிவியிலும் நேரடியாக ஒளிபரப்பானது. இதில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

செலிபிரிட்டி பிரஸ் மீட் டாஸ்க்

My Mom dont have secret BiggBossUltimate Vanitha Daughter Jovika

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் செலிபிரிட்டி பிரஸ் மீட் டாஸ்க் அரங்கேறியது. இந்த டாஸ்க்கை அடுத்து வனிதா, தனது டீம் ஜெயித்ததாக கூறி, காபி பொடியை தான் எடுத்துக்கொண்டு வைத்துக்கொள்ள முயற்சித்தார். ஆனால் அதுபற்றி கேள்வி எழுப்பிய அபிராமி, அதை கண்டித்ததுடன், காபி பொடி எல்லாருக்குமானது என்று சொல்ல இருவருக்கும் வாதம் உண்டானது.

அழுதேவிட்ட வனிதா

My Mom dont have secret BiggBossUltimate Vanitha Daughter Jovika

இதனைத் தொடர்ந்து வனிதா, தனக்கு ஏன் இந்த பிரச்சனையை பிக்பாஸ் கொடுக்கிறார் என சொல்லி, அழத் தொடங்கிவிட்டார். அந்த ஆடியோ டிஸ்னி+ ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆனது. அதைக்கேட்ட ரசிகர்கள் பலரும் வனிதா விஜயகுமார் கேட்டபடி அந்த காபியை அவருக்கு கொடுங்கப்பா. வனிதா அக்காவை இப்படி கஷ்டப்படுத்தாதீர்கள் என கூறிவந்தனர்.

அம்மாவுக்கு Secret-அ வெச்சுக்க தெரியாது

My Mom dont have secret BiggBossUltimate Vanitha Daughter Jovika

இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தமது தாயார் குறித்து மனம் திறந்துள்ளார். அதன்படி நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிதா, “எங்க அம்மா ஒரு திறந்த புத்தகம். அவங்களுக்கு சீக்ரெட்ட வெச்சுக்கவே தெரியாது. கண்டிப்பா அதுல இருந்து ஒரு அழகான ஸ்டோரியை சொல்வதற்கும் வாய்ப்பு உண்டு” என்று தம்முடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

பிக்பாஸ் ஓடிடி

My Mom dont have secret BiggBossUltimate Vanitha Daughter Jovika

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்பை போல் அல்லாமல் இந்த ஓடிடி நிகழ்ச்சி, எந்தவித சென்சார் கட் மற்றும் பெரிய அளவிலான காட்சிகள் கட் பண்ணப்படுவது உள்ளிட்ட விஷயங்கள் இல்லாமல் நடக்கிறது. பெரும்பாலும் ஒரு நாள் முழுவதும் நடக்கக் கூடிய விஷயங்களை 24 மணி நேரமும் நேரலையில் காட்டப்பட்டு வருகிறது. அதே போல் இந்த நிகழ்ச்சியின் 24 மணிநேரமும் நேரலை காட்சி ஓடிக் கொண்டிருப்பது போல, மொத்த நிகழ்ச்சியும் ஒரு மணி நேரமாக இரவு 9 மணிக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தினமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: எனக்கு ஒரு M**ம் தேவயில்ல- வனிதா ஆவேசம்..  இன்னுமா முடியல இந்த காபி பொடி பிரச்சன..

தொடர்புடைய இணைப்புகள்

My Mom dont have secret BiggBossUltimate Vanitha Daughter Jovika

People looking for online information on BiggBossUltimateTamil, Jovika, Vanitha, Vanitha Daughter Jovika Interview will find this news story useful.