www.garudabazaar.com

உடல் அரசியலுக்கு ஆதரவாக களமிறங்கிய இலியனா! எடிட் செய்யாத ஒரிஜினல் PHOTO-வை வெளியிட்டு பரபரப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: நடிகை இலியானா உடல் அரசியலுக்கு ஆதராவாக தனது எடிட் செய்யப்படாத புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Ileana D Curuz shares unedited photo of her promoted self-love

BOX OFFICE: புஷ்பா படத்தின் அள்ள அள்ள குறையாத வசூல்! 50 வது நாளில் செய்த மகத்தான சாதனை

தமிழ் சினிமாவில் கேடி படத்தில் அறிமுகமான நடிகை இலியானா, பின் தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையானார். பின் 2012 ஆம் ஆண்டு வெளியான நண்பன் படத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரீ- என்ட்றி கொடுத்தார். இந்த நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

Ileana D Curuz shares unedited photo of her promoted self-love

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். இந்தியில் வருண் தவான், அஜய் தேவ்கன், ரன்பீர் கபூர், சயிப் அலி கான் போன்ற ஹூரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். இலியானா, கடைசியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தொடரான ​​தி பிக் புல்லில் அபிஷேக் பச்சன் மற்றும் நிகிதா தத்தாவுடன் நடித்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை இலியானா. அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், பிகினி உடை புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருவார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், சுய-காதல் பற்றிய பதிவுகளை பகிர்ந்து கொண்டார்.

Ileana D Curuz shares unedited photo of her promoted self-love

அதில், தனது தோற்றத்தைப் பற்றி 'எப்போதும் கவலைப்படுவதாக' கூறி. “எனது இடுப்பு மிகவும் அகலமாக உள்ளது, என் தொடைகள் மிகவும் தள்ளாடுகின்றன, என் இடுப்பு போதுமான அளவு குறுகவில்லை, என் வயிறு போதுமான அளவு தட்டையாக இல்லை, என் மார்பகங்கள் போதுமானதாக இல்லை, என் பிட்டம் மிகவும் பெரியது, என் கைகள் மிகவும் ஜிகிலி, மூக்கு போதுமானதான வளர்ச்சி இல்லை, உதடுகள் போதுமான அளவு வளரவில்லை..... நான் போதுமான உயரம் இல்லை, போதுமான அழகாக இல்லை,  போதுமான புத்திசாலி இல்லை, போதுமான 'சரியான' இல்லை என்று நான் கவலைப்பட்டேன், பின்னர் அழகு குறித்து புரிதல் ஏற்பட்டது” என்று இலியானா எழுதி இருந்தார். 

இதற்கு முன்னதாக, இலியானா உடல் டிஸ்மார்ஃபிக் கோளாறுடன் போராடியதாகவும், அதனால் தற்கொலை எண்ணங்கள் கூட இருப்பதாகவும் கூறினார். 2017ல் நடந்த 21வது உலக மனநல காங்கிரஸில் அவர் இதைப் பற்றி பேசினார்.

Ileana D Curuz shares unedited photo of her promoted self-love

பிரச்சனைகளை சமாளிக்க மருத்துவ சிகிச்சை எப்படி உதவியது என்பதையும் இலியானா வெளிப்படுத்தினார். "குறைபாடுகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும், நீங்கள் யார் என்பதை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு மனிதராக இருக்க உரிமை உண்டு, மேலும் நீங்கள் குறைபாடுடையவராக இருக்கவும் உரிமை உண்டு. உங்கள் குறைபாடுகளில், உள்ள தனித்துவத்தில் நிறைய அழகு இருக்கிறது, ”என 2017ல் நடந்த 21வது உலக மனநல காங்கிரஸில் இலியானா பேசினார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் இடுகையில் சுய-அன்பு மற்றும் உடல் அரசியல் நேர்மறையை ஊக்குத்து பதிவிட்டுள்ளார். ஒருவரை 'ஒல்லியாக' மற்றும் 'அதிக நிறமாக' காட்டக்கூடிய அனைத்து புகைப்பட எடிட்டிங் ஆப் பயன்பாடுகளையும் நீக்கியதாக கூறியுள்ளார், நடிகை இலியானா டி'க்ரூஸ்.

Ileana D Curuz shares unedited photo of her promoted self-love

மேலும் தனது ஸ்டோரியில் “உங்கள் உடலை மிகவும் சிரமமின்றி மாற்றியமைக்கும் ஆப் பயன்பாடுகளில் சிக்கிக்கொள்வது மிகவும் எளிதானது, உங்களை 'ஒல்லியாக', 'அதிக நிறமான' காட்டும் ஆப்ஸ் அனைத்தையும் நான் நீக்கிவிட்டதில் பெருமைப்படுகிறேன். இது தான் நான், நான் என் ஒவ்வொரு உடல் அங்குலத்தையும், ஒவ்வொரு வளைவையும், நான் நேசிக்கிறேன், ”என்று இலியானா எழுதி உள்ளார். ‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்’ என்ற ஹேஷ்டேக்கையும் அதனுடன் சேர்த்துள்ளார்.

தியேட்டர் ரிலீஸ்க்கு அப்றம் தானே ஓடிடில வரும்?.. வரலாற்றை மாற்றிய சூர்யாவின் சூரரைப்போற்று..

Ileana D Curuz shares unedited photo of her promoted self-love

People looking for online information on Ileana D Cruz will find this news story useful.